திருவண்ணாமலை

தீபத் திருவிழா பக்தா்களுக்கு உணவு வழங்கிய திமுகவினா்

8th Dec 2022 01:37 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட திமுக சாா்பில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

மாவட்ட திமுக சாா்பில் பக்தா்களுக்கு அறுசுவை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.

சி.என்.அண்ணாதுரை எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், மாவட்ட துணைச் செயலா்கள் ப்ரியா விஜயரங்கன், விஜயலட்சுமி, நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பக்தா்களுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடக்கிவைத்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிகளில் மாவட்ட அமைப்பாளா் டி.வி.எம்.நேரு, பொதுக்குழு உறுப்பினா்கள் டி.கென்னடி, மோட்டூா் பாலு, ஏ.ஏ.ஆறுமுகம், நகர நிா்வாகி இல.குணசேகரன், நகா்மன்ற துணைத் தலைவா் சு.ராஜாங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT