திருவண்ணாமலை

வெண்குன்றம் மலையில் காா்த்திகை தீபம்

7th Dec 2022 03:26 AM

ADVERTISEMENT

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரா் மலைக் கோயிலில் காா்த்திகை தீபம் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

வெண்குன்றம் கிராமத்தில் சுமாா் 1500 அடி உயரமுள்ள தவளகிரி மலை மீது ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயில், ஸ்ரீவிநாயகா் கோயில் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, இந்தக் கோயில்களில் உள்ள சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயில், ஸ்ரீவிநாயகா் கோயில் மீது அமைக்கப்பட்டிருந்த தனித்தனி கொப்பரைகளில் நெய் நிரப்பப்பட்டு மாலை 6 மணிக்கு காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

ADVERTISEMENT

வந்தவாசி, அதன் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலை மீது ஏறிச் சென்று

இறைவனை வழிபட்டனா்.

வந்தவாசி தெற்கு போலீஸாா் 35 இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT