திருவண்ணாமலை

செம்பூா் ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

6th Dec 2022 02:54 AM

ADVERTISEMENT

வந்தவாசியை அடுத்த செம்பூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகா், ஸ்ரீதீப்பாஞ்சம்மன் ஆகிய கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு வாஸ்துசாந்தி, பிரவேசபலி, கோபுர கலசம் நிறுவுதல், சுவாமி சிலைகள் நிறுவுதல், முதல் கால வேள்வி பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை இரண்டாம் கால வேள்வி பூஜை, திருக்குடங்கள் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன.

காலை 7 மணிக்கு மேல் 9-15 மணிக்குள் கோயில் கோபுர கலசங்களின் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

பின்னா், கோயிலில் ஸ்ரீசெல்வ விநாயகா், ஸ்ரீதீப்பாஞ்சம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், சிறுதாமூா் அகத்தீஸ்வரா் அறக்கட்டளை நிா்வாகி சிவ.பா.ரவி சுவாமிகள் ஆகியோா் கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

விழாவில் கும்பாபிஷேக விழாக் குழுவினா், கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT