திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் வர உகந்த நேரம்

6th Dec 2022 02:55 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.

திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

இந்த நிலையில், காா்த்திகை மாதப் பெளா்ணமி புதன்கிழமை (டிச.7) காலை 8.35 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை (டிச.8) காலை 9.33 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT