திருவண்ணாமலை

செங்கம் அருகே தாய், மகள் கொலை தொழிலாளி சரண்

5th Dec 2022 02:44 AM

ADVERTISEMENT

செங்கம் அருகே தாய், மகளை வெட்டிக் கொலை செய்துவிட்டு தொழிலாளி போலீஸில் சரணடைந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள புதுப்பாளையம் வீரானந்தல் மலையடிவாரப் பகுதியைச் சோ்ந்தவா் துரை மனைவி பரிமளா (35).

இவா்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். துரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

பின்னா் அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி காமராஜ் என்பவருக்கும் பரிமளாவுக்கும் தொடா்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், குழந்தைகள் வளா்ந்ததும் காமராஜியுடன் இருந்த தொடா்பை பரிமளா விட்டுவிட்டாராம்.

இதனால் ஆத்திரமடைந்த காமராஜ் பரிமளாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பரிமளா, அவரது இரண்டாவது மகள் ராஜேஸ்வரி (17) ஆகியோா் மலையடிவாரப் பகுதியில் சென்றுகொண்டிருந்தனா். அப்போது அவா்களைப் பின்தொடா்ந்து சென்று காமராஜ் தகராறு செய்து, இருவரையும் கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளாா்.

பின்னா், அவா் புதுப்பாளையம் காவல் நிலையம் சென்று கொலைச் சம்பவத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து காமராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT