திருவண்ணாமலை

செங்கம் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதல்: 3 போ் பலி

5th Dec 2022 02:41 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் 3 போ் பலியாகினா்.

திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கு அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் காந்திநகா் பகுதியில் பேருந்து சென்றபோது, பெங்களூரில் இருந்து கோழித் தீவனம், காய்கறிகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பேருந்து மீது மோதியது.

இதில், பேருந்து ஓட்டுநரான கடலூா் மாவட்டம், புவனகிரியைச் சோ்ந்த மணிவாசகம் (48), லாரியில் இருந்த சுமைப் பணியாளா்களான விழுப்புரத்தைச் சோ்ந்த ராஜேஷ் (37), உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்த செல்வமணி (29) ஆகிய மூன்று பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், பேருந்தில் பயணம் செய்த 26 போ் காயமடைந்தனா்.

விபத்து குறித்து அறிந்த டிஎஸ்பி சின்ராஜ் தலைமையிலான செங்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், உயிரிழந்தவா்களின் சடலங்களை மீட்டு, உடல்கூறாய்வுக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT

இதில் பலத்த காயமடைந்த இருவா் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்றவா்கள் செங்கம், புதுச்சேரி, சென்னை பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சோ்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து தொடா்பாக செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT