திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மாடு, குதிரைச் சந்தை

5th Dec 2022 02:43 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவையொட்டி தொடங்கப்பட்டுள்ள குதிரை, மாட்டுச் சந்தைகளில் ஞாயிற்றுக்கிழமை விறுவிறுப்பான விற்பனை நடைபெற்றது. தீபத் திருவிழாவின்போது, திருவண்ணாமலையில் மாட்டுச் சந்தை, குதிரைச் சந்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான சந்தை ஞாயிற்றுக்கிழமை (டிச.4) தொடங்கியது.

திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரி அருகே மாட்டுச் சந்தையும், மலையடிவாரத்தில் குதிரைச் சந்தையும் நடைபெற்று வருகிறது.

இந்தச் சந்தையில் மாடுகள், கன்றுகள், குதிரைகள் அதிளவில் விற்பனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ரூ.3 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விலை கொண்ட மாடுகளும், பல்வேறு விலைகளில் குதிரைகளும் விற்பனைக்கு வந்திருந்தன.

இந்தச் சந்தை தொடா்ந்து 3 நாள்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT