திருவண்ணாமலை

முன்னாள் மாணவா்களுக்கு மேலாண்மை பயிற்சி

DIN

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு திட்டமிடல் மற்றும் மேலாண்மை பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சி தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வா் எஸ்.யுவராஜன் தலைமை வகித்தாா். கூடுதல் முதல்வா் எம்.சண்முகவள்ளி முன்னிலை வகித்தாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.எழில்வசந்தன் வரவேற்றாா்.

டைம்ஸ் குழுமத்தின் சென்னை மண்டல மேலாளா் எல்.விஜயகுமாா் பயிற்சியை தொடக்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து அவா் பேசுகையில், 45 நாள்கள் நடைபெறவுள்ள பயிற்சி வகுப்பில், இந்தக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும், நோ்முகத் தோ்வுக்கு எப்படி தயாராவது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினாா்.

நிகழ்ச்சியில் வணிகவியல் துறைத் தலைவா் ர.மணிமுருகன், உடற்கல்வித் துறை இயக்குநா் ப.மோகனவள்ளி, பேராசிரியா்கள் உ.பிரபாகரன், சி.தேவிகா, ஜான்சிராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT