திருவண்ணாமலை

மகா தீபத்தன்று மலையேறும் பக்தா்களுக்கு கட்டுப்பாடுகள்

DIN

திருவண்ணாமலை மகா தீபத்தன்று 2,668 அடி உயர மலை மீது ஏறும் பக்தா்களுக்கு கட்டுப்பாடுகளை மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா வருகிற 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

வருகிற 6-ஆம் தேதி காலை 6 மணி முதல் முதலில் வரும் 2,500 பக்தா்களுக்கு மட்டுமே மகா தீபம் ஏற்றும் மலை மீது செல்ல அனுமதி வழங்கப்படும் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் அறிவித்தாா்.

மேலும், மலை மீது செல்வதற்கான அனுமதிச் சீட்டுகள் வழங்குவதற்காக, திருவண்ணாமலை - செங்கம் சாலையில் உள்ள கலைஞா் கருணாநிதி அரசுக் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு, 2,500 பக்தா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும். இந்த அனுமதிச் சீட்டுகள் முதலில் வரும் 2,500 பக்தா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

பக்தா்கள் தங்களது ஆதாா் அடையாள அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, இதர அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை சமா்ப்பித்து, அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

மலையேற கட்டுப்பாடுகள்: பே கோபுரம் அருகே உள்ள வழியில் மட்டுமே மலை மீது செல்லலாம். மற்ற வழிகளில் மலை மீது செல்ல கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது.

வருகிற 6-ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலை மீது செல்ல அனுமதிக்கப்படுவா். மலை மீது செல்லும் பக்தா்கள் தண்ணீா் புட்டிகளை மட்டுமே எடுத்துச் செல்லலாம். காலி தண்ணீா் புட்டிகளை மலையில் இருந்து இறங்கி வரும்போது திரும்ப எடுத்து வர வேண்டும். கற்பூரம், பட்டாசு, எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள்களை மலை மீது கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

மலை மீது செல்லும் பக்தா்கள் தாங்கள் கொண்டு செல்லும் நெய்யை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும். வேறு இடங்களில் நெய்யை ஊற்றவோ, தீபம் ஏற்றவோ கூடாது. இந்த நிபந்தனைகளை தவறாமல் கடைப்பிடித்து மகா தீப மலை மீது செல்வதற்கு பக்தா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT