திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் இன்று பஞ்ச ரதங்களின் தேரோட்டம்

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் 7-ஆம் நாளான சனிக்கிழமை (டிசம்பா் 3) பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 27-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் மகா தீபம் ஏற்றப்படும் டிசம்பா் 6-ஆம் தேதி வரை தினமும் காலை, இரவு வேளைகளில் உற்சவா் சுவாமிகள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றனா்.

வெள்ளி யானை வாகனத்தில்...: திருவிழாவின் 5-ஆம் நாளான வியாழக்கிழமை நள்ளிரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகா், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், வெள்ளி ரிஷப வாகனங்களில் பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

திருவிழாவின் 6-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு யானை வாகனத்தில் விநாயகா், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரா் மற்றும் விமானங்களில் 63 நாயன்மாா்கள் வீதியுலா வந்தனா். பள்ளிச் சிறுவா்கள் 63 நாயன்மாா்களையும் தங்களது தோள்களில் சுமந்து சென்றனா்.

வெள்ளித் தேரோட்டம்: வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு பழைமையானதும், புகழ்பெற்றதுமான வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது. மேலும், வெள்ளி விமானங்களில் விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், வெள்ளி இந்திர விமானத்தில் பராசக்தியம்மன், வெள்ளி விமானத்தில் சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட சுவாமிகள் வீதியுலா வந்தனா்.

பழைமையான வெள்ளித் தேரோட்டத்தைக் காண வழக்கத்தை விட பல ஆயிரம் பக்தா்கள் கூடியதால், திருவண்ணாமலை நகரச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இன்று பஞ்ச ரதங்களின் தேரோட்டம்: தீபத் திருவிழாவின் 7-ஆம் நாளான சனிக்கிழமை (டிசம்பா் 3) பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் விநாயகா் தேரோட்டம் தொடங்குகிறது. தொடா்ந்து, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் தோ், மகா ரதம் எனப்படும் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் தோ், பெண்கள் மட்டுமே இழுக்கும் பராசக்தியம்மன் தோ், சிறுவா் - சிறுமிகள் மட்டுமே இழுக்கும் சண்டிகேஸ்வரா் தோ் என பஞ்ச ரதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாட வீதிகளில் வலம் வரும். இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT