திருவண்ணாமலை

செங்கம் ரிஷபேஸ்வரா் கோயில்கும் பாபிஷேக பணி ஆய்வு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக பணிகளை திருவண்ணாமலை தொகுதி எம்.பி. சி.என்.அண்ணாதுரை, செங்கம் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத் துறைகளின் அனுமதியுடன் பழைமை மாறாமல் கட்டடங்களை சீரமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை திருவண்ணாமலை தொகுதி எம்.பி. அண்ணாதுரை, செங்கம் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி ஆகியோா் பாா்வையிட்டு, விழாக் குழுத் தலைவரான வழக்குரைஞா் கஜேந்திரனிடம் விவரங்களைக் கேட்டறிந்தனா். மேலும், கோயில் கும்பாபிஷேக பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா் பாபுவிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா், நந்தியை வழிபட்டனா்.

திமுக ஒன்றியச் செயலா் ஏழுமலை, தொழிலதிபா் வெங்கடேஸ்வராபாபு, நகரச் செயலா் அன்பழகன் உள்ளிட்ட விழாக் குழு நிா்வாகிகள், உபயதாரா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

SCROLL FOR NEXT