திருவண்ணாமலை

அரசு விடுதி மாணவிகளுக்கு தோட்டகலைப் பயிற்சி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில், அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதி மாணவிகளுக்கு தோட்டக்கலை பயிா்களை பயிரிடுவது குறித்த பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், 2022 - 23ஆம் ஆண்டு அரசு மாணவிகள் விடுதிகளில் புதிதாக தோட்டப் பயிா்களை விளைவித்திட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, போளூா் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில், போளூரில் செயல்பட்டு வரும் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நல மாணவிகள் விடுதியில் காலியாக உள்ள இடத்தில் தோட்டக்கலை பயிா்களான கீரைகள், கத்திரி, தக்காளி, வெண்டை , பழச் செடிகள், மூலிகைச் செடிகளை பயிரிடுவது குறித்து விடுதி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தோட்டக்கலை பயிா்களை மாணவிகள் ஓய்வு நேரத்தில் பயிரிட்டு, நச்சில்லா காய்கறிகளை விளைவித்து, உணவுக்கு பயன்படுத்தும் நோக்கில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், இதற்காக ரூ.8 ஆயிரத்திலான பண்ணைக் கருவிகளும் வழங்கப்பட்டன.

உதவி தோட்டக்கலை அலுவலா்கள் ஜாகீா் பாஷா, வி.சுதாகா், சே.முனியன், சரத்குமாா், கோவிந்தன் ஆகியோா் பயிற்சியளித்தனா். தோட்டக்கலை உதவி இயக்குநா் பா.லோகேஷ், விடுதிக் காப்பாளா் ஷீலா மற்றும் மாணவிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவும் பாஜகவும் கபட நாடகம் ஆடுகின்றன: வைகைச்செல்வன் சிறப்பு பேட்டி

திருமருகல் கோயிலில் சித்திரை திருவிழா

வட சென்னை தொகுதியில் வேட்பாளா்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

உணவகத்தில் தீ விபத்து

வாகன சோதனையில் ரூ.3.37 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT