செய்யாறு வட்டம், செங்கம்பூண்டி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.4.94 லட்சம் இருந்தது.
இந்தக் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. அறநிலையத் துறை செய்யாறு ஆய்வாளா் ப.முத்துசாமி, செயல் அலுவலா் ந.சிவக்குமாா், கணக்காளா் லோ.ஜெகதீசன், ஊராட்சி மன்றத் தலைவா் பொன். ஏழுமலை உள்ளிட்டோா் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
இதில், ரூ.4 லட்சத்து 94 ஆயிரத்து 982-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.