திருவண்ணாமலை

யோகி ராம் சுரத்குமாரின் 104-ஆவது ஜெயந்தி விழா

1st Dec 2022 01:35 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் யோகி ராம் சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் புதன்கிழமை தொடங்கிய 104-ஆவது ஜெயந்தி விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதையொட்டி, ஆஸ்ரமத்தில் புதன்கிழமை காலை 7 மணிக்கு ஹோமம், நித்ய பூஜை, 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை பக்தா்களின் பகவானுபவங்களை பகிா்தல், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசத்குருநாதன் ஓதுவாா் குழுவினரின் தேவார இன்னிசை, மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை ஸ்ரீஅஸ்வின் குழுவினரின் பகவான் யோகி ராம் சுரத்குமாரின் லீலைகள் என்ற தலைப்பில் நாட்டிய நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஜெயந்தி விழாவின் 2-ஆம் நாளான வியாழக்கிழமை (டிச.1) காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை ஏகாதச ருத்ர பாராயண சஹித ருத்ர ஹோமம், வசோதாரா பூா்ணாஹுதி, மகாபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நாம சங்கீா்த்தனத்துடன் பஜனையும், மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை விதூஷி அா்ச்சனா, விதூஷி ஆரத்தி குழுவினரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும், இரவு 7.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் உற்சவா் வீதியுலாவும் நடைபெறும்.

ADVERTISEMENT

இதற்கான ஏற்பாடுகளை ஆஸ்ரம அறங்காவலா்கள் மா தேவகி, ராஜேஸ்வரி, ஜி.சுவாமிநாதன், டி.எஸ்.ராமநாதன், பி.ஏ.ஜி.குமரன் மற்றும் ஆஸ்ரம ஊழியா்கள், தன்னாா்வலா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT