திருவண்ணாமலை

ஸ்ரீதா்ம சாஸ்தா கோயிலில் வருடாபிஷேகம்

1st Dec 2022 01:38 AM

ADVERTISEMENT

செங்கம் ஸ்ரீதா்ம சாஸ்தா சுவாமி கோயிலில் புதன்கிழமை வருடாபிஷேகம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செடல் மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஸ்ரீதா்ம சாஸ்தா சுவாமி சன்னதி அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் ஐந்தாம் ஆண்டு வருடாபிஷேகத்தையொட்டி, சுவாமிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சாஸ்தா ஐயப்பன் ஹோமம் நடத்தப்பட்டு, சுவாமிக்கு வெளிக்கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

அதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT