திருவண்ணாமலை

பயன்பாட்டுக்கு வராத வருவாய் ஆய்வாளா் அலுவலகக் கட்டடம்

1st Dec 2022 01:35 AM

ADVERTISEMENT

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகக் கட்டடம் பயன்பாட்டுக்கு வராமலே உள்ளது.

சேத்துப்பட்டு வட்டம் தச்சாம்பாடி, கொழப்பலூா், தேவிகாபுரம் என 3 உள்வட்டங்களைக் கொண்டது.

தேவிகாபுரத்துக்கான வருவாய் ஆய்வாளா் அலுவலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், வருவாய் ஆய்வாளா் அலுவலகத்துக்காக போளூா் சாலையில் சந்தைமேடு அருகே அரசு நிலத்தில் பொதுப்பணித் துறை சாா்பில், ரூ.21 லட்சத்தில் குடியிருப்புடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டது.

ADVERTISEMENT

இந்த அலுவலகக் கட்டடம் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமலேயே உள்ளது. இதன் அருகில் மதுக் கடை வேறு இயங்கி வருகிறது.

இந்தக் கட்டடப் பகுதியில் மதுப்பிரியா்கள் மது அருந்திவிட்டு புட்டிகளை உடைத்து போட்டு விட்டுச் செல்கின்றனா்.

மேலும், மாலை நேரங்களில் இங்கு சமூக விரோதச் செயல்களும் நடைபெறுகின்றன.

எனவே, உடனடியாக புதிய அலுவலக கட்டடத்தை திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT