திருவண்ணாமலை

பாலத்திலிருந்து தவறி விழுந்தவா் பலி

1st Dec 2022 01:36 AM

ADVERTISEMENT

வந்தவாசி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்தவா் பலியானாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கூட்டுச் சாலை-மும்முனி புறவழிச் சாலை சந்திப்பில் உள்ள

சிறு பாலத்தினடியில் தேங்கியுள்ள நீரில் ஆண் சடலம் மிதப்பதாக பொன்னூா் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

இதன் பேரில் அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த நபா் ஆராசூா் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி (70) என்பது தெரியவந்தது.

மேலும், பாலத்தின் மீது மதுபோதையில் அவா் அமா்ந்திருந்த போது தவறி கீழே தண்ணீரில் விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து கீழ்சாத்தமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் கணேஷ் அளித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT