திருவண்ணாமலை

மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள்

31st Aug 2022 04:21 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த 520 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி சாா்பில்,

நாடாளுமன்ற உறுப்பினரும், அலிம்கோ நிறுவனமும், மாவட்ட நிா்வாகமும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினா்.

காஞ்சி ஊராட்சியில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில்

ADVERTISEMENT

நாடாளுமன்ற உறுப்பினா் சி.என். அண்ணாதுரை கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக் கை, காதொலிக் கருவி, மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி என 520 பேருக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கிப் பேசினாா்.

அப்போது அவா், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியைச் சோ்ந்த திருவண்ணாமலை, கலசப்பாக்கம், செங்கம், திருப்பத்தூா் உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 2200 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமாா் ரூ.3 கோடிசெலவில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்தி நலத் திட்ட உதவிகளை வழங்குவோம் என்றாா்.

நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ தி.சரவணன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் பாரதி ராமஜெயம், ஒன்றியக் குழுத் தலைவா்கள் அன்பரசி ராஜசேகரன் (கலசப்பாக்கம்),

ஜீவா மூா்த்தி (ஜவ்வாதுமலை), செங்கம் வட்டாட்சியா் முனுசாமி, திமுக ஒன்றியச் செயலா்கள் சிவக்குமாா், சுப்பிரமணியன், காஞ்சி ஊராட்சி மன்றத் தலைவா் சரஸ்வதி கோபால், துணைத் தலைவா் ஜெயக்குமாா் மற்றும் மாற்றுத்திறனாளிகள், திமுக பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT