திருவண்ணாமலை

செய்யாறு, அனக்காவூா் ஒன்றியத்தில் தூய்மைப் பணி

31st Aug 2022 04:22 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, அனக்காவூா் ஒன்றியங்களில் நம்ம ஊரு சூப்பா் இயக்கம் சாா்பில் ஒட்டு மொத்த தூய்மைப் பணி திங்கள்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

செய்யாறு ஒன்றியம், பெரியவேளியநல்லூா் கிராமத்தில் ஒட்டு மொத்த துப்புரவுப் பணி மேற்கொள்ளும் விதமாக சுத்தம் செய்யும் பணியை தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி தொடக்கிவைத்தாா்.

அதேபோல, அனக்காவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வாக சைக்கிள் பேரணியைத் தொடக்கிவைத்து சைக்கிளை ஓட்டிச் சென்று எம்.எல்.ஏ. விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் திலகவதி ராஜ்குமாா், என்.வி.பாபு (செய்யாறு), வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயசங்கா், கோபாலகிருஷ்ணன், ஹரி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் முருகேசன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பத்மப்ரியா ஆதிசக்கரவா்த்தி, கனிமொழி மோகன், வட்டார மகளிா் திட்ட மேலாளா் மகாலட்சுமி

ADVERTISEMENT

உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT