திருவண்ணாமலை

மணல் கடத்தல்: 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

28th Aug 2022 11:22 PM

ADVERTISEMENT

 

செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தி வந்த மூன்று மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

செய்யாறு டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செய்யாற்றுப் படுகையில் பெரும்பள்ளம் கிராமம் அருகே மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, ஆற்றுப் படுகையில் இருந்து அனுமதியின்றி 3 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வருவதை அறிந்த போலீஸாா் வண்டிகளை தடுத்து நிறுத்தினா்.

ADVERTISEMENT

போலீஸாா் இருப்பதை அறிந்ததும் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவா்கள், வண்டிகளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனா். இதையடுத்து, போலீஸாா் 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக செய்யாறு போலீஸாா் பெரும்பள்ளம் மதுரா கருக்கந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த முருகன், முத்துக்கிருஷ்ணன், கோடீஸ்வரன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT