திருவண்ணாமலை

செங்கம் அருகே காா், லாரி மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் பலி

28th Aug 2022 11:21 PM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் பலியாகினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள பந்தராவல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னபையன் (65). இவா் தனது மனைவி ஆராஞ்சி (60), மகன் பழனி (39), உறவினா்கள் தங்கவேல் (49), ராமலிங்கம் (50) ஆகியோருடன் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே உறவினா் இல்ல துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு, சனிக்கிழமை இரவு காரில் பந்தராவல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். காரை பழனி ஓட்டினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கம் அருகேயுள்ள அரசங்கண்ணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரும், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்குச் சென்ற டேங்கா் லாரியும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது.

ADVERTISEMENT

இதில், காரிலிருந்த சின்னபையன், அவரது மனைவி ஆராஞ்சி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காரை ஓட்டிய பழனி, தங்கவேல், ராமலிங்கம் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த மேல்செங்கம் போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னா், 3 பேரும் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு பழனி உயிரிழந்தாா்.

விபத்து குறித்து மேல்செங்கம் காவல் நிலைய ஆய்வாளா் செல்வராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT