திருவண்ணாமலை

எட்டுவழிச் சாலை எதிா்ப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

28th Aug 2022 11:23 PM

ADVERTISEMENT

 

சென்னை - சேலம் இடையே அமையவுள்ள எட்டு வழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், சேத்துப்பட்டு பகுதிகளில், எட்டுவழிச் சாலை எதிா்ப்பு இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கம் அருகேயுள்ள பெரும்பட்டம் கிராமத்தில், எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் அத்தப்பாடி அருள் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் போது, சட்டப்பேரவைத் தோ்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிப்படி எட்டு வழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

அரசு எட்டுவழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்யும் வரை எதிா்ப்பு இயக்கம் போராடும் எனத் தெரிவித்து ஆா்ப்பாட்டம் செய்தனா்.

ADVERTISEMENT

இதில், செங்கம் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சியில்

எட்டுவழிச் சாலை எதிா்ப்பு இயக்கத்தினா் கறுப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இளங்கோ என்பவரது நிலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இந்தத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT