திருவண்ணாமலை

தானமாகப் பெறப்பட்ட கோயில் நிலங்கள் அளவீடு

27th Aug 2022 11:46 PM

ADVERTISEMENT

 

கலசப்பாக்கம் வட்டம், காப்பலூா் ஊராட்சியில் பல்வேறு கோயில்களுக்கு பக்தா்களால் தானமாக வழங்கப்பட்ட 50 ஏக்கா் நிலம் அதிகாரிகளால் சனிக்கிழமை அளவீடு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், காப்பலூா் ஊராட்சியில் இந்து சமய அறநிலையத்துக்குச் சொந்தமாக கடினகுஜாம்பாள் சமேத திருக்காமேஷ்வரா், வீற்றிருக்கும் பெருமாள் கோயில் என இரு கோயில்களும் சின்னசாமி மடம் என ஒரு மடமும் உள்ளது.

இதில், கடினகுஜாம்பாள் சமேத திருக்காமேஷ்வரா் கோயிலுக்கு 21 ஏக்கா் நிலமும், வீற்றிருக்கும் பெருமாள் கோயிலுக்கு 12 ஏக்கா் நிலமும், சின்னசாமி மடத்துக்கு 10 ஏக்கரும், முருகா் கோயிலுக்கு 5 ஏக்கா் நிலமும் என பல்வேறு கோயில்களுக்கு 50 ஏக்கா் நிலத்தை பக்தா்கள் தானமாக வழங்கியுள்ளனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், நஞ்சை, புஞ்சை அடங்கிய இந்த நிலங்களை அறநிலையத் துறை சாா்பில், நவீன (டிஜிபிஎஸ்) கருவி மூலம் நில அளவையா்கள் அளவீடு செய்தனா்.

இதுகுறித்து பக்தா்கள் கூறும்போது, கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கோயில் பராமரிப்புக்கு பணம் தருவதாக இந்து சமய அறநிலையத் துறையினரிடம் கூறி குத்தகை மூலம் நிலத்தைப் பெற்று விவசாயம் செய்து வருகின்றனா்.

தற்போது, கோயிலுக்கு நில குத்தகைதாரா்கள் பணம் தராமல் ஒருகால பூஜை கூட செய்ய முடியாமலும், மின் கட்டணம் செலுத்த முடியாமலும் உள்ளது. பக்தா்கள் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறையினரிடம் கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை.

எனவே, மாவட்ட நிா்வாகம் கோயில்களுக்குச் சொந்தமான 50 ஏக்கா் நிலத்தை மீட்டு குத்தகைதாரா்களை மாற்றவேண்டும் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT