திருவண்ணாமலை

சாலை விபத்தில் ஆசிரியா் பலி

27th Aug 2022 11:44 PM

ADVERTISEMENT

 

ஆரணியில் நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி அரசுப் பள்ளி ஆசிரியா் பலியானாா்.

ஆரணி- சேத்துப்பட்டு சாலையில் உள்ள லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் துளசிராமன் (48) (படம்). இவா், வாழப்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை தனியாா் மருத்துவமனையில் இருந்த அவரது தந்தை சந்திரனை சந்திக்க வீட்டில் இருந்து பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

ADVERTISEMENT

அருணகிரிசத்திரம் பகுதியில் உள்ள மும்முனை சாலை சந்திப்பு திருப்பத்தில் செல்லும் போது, நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தாா்.

அப்போது, அவ்வழியாக வந்த நெல் அறுவடை இயந்திர வாகனத்தில் சிக்கி துளசிராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த ஆரணி நகர காவல் ஆய்வாளா் கோகுல்ராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடம் சென்று துளசிராமன் உடலைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து துளசிராமனின் மனைவி ஜீவாஅளித்த புகாரின் பேரில், ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், விபத்துக்கு காரணமாக நெல் அறுவடை இயந்திர ஓட்டுநா் சேலத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (29) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT