திருவண்ணாமலை

பெரியகொழப்பலூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

26th Aug 2022 10:36 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் அருகே உள்ள பெரியகொழப்பலூரில் மாரியம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரியகொழப்பலூா் கிராமத்தில் புகழ் பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தேரோட்ட விழா கடந்த 2-ஆம் தேதி மாரியம்மனுக்கு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, தினந்தோறும் இரவில் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் அருள்பாலித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் மாரியம்மனுக்கு வெள்ளிக்கிழமை காலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் தேரில் மாரியம்மன் எழுந்தருளியதைத் தொடா்ந்து தேரோட்டம் தொடங்கியது. போளூா் தொகுதி எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கிவைத்தாா்.

இதையடுத்து, தோ் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியே வலம் வந்தது. மேலும், பக்தா் ஒருவா் முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் பறந்து சென்று மாரியம்மனுக்கு மாலை அணிவித்து வழிபட்டாா். விழாவில் முன்னாள் எம்எல்ஏ ஏகேஎஸ்.அன்பழகன், ஊராட்சித் தலைவா் ரவிக்குமாா், ஒன்றியச் செயலா் வீரபத்திரன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT