திருவண்ணாமலை

நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

26th Aug 2022 10:34 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆறு, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை செயல்படுத்த வேண்டும். ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை மூலம் ஏரி, குளங்கள், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குறைதீா் கூட்டங்களில் அளிக்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினா்.

இதையடுத்துப் பேசிய ஆட்சியா் பா.முருகேஷ், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் முறையாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட126 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் பா. முருகேஷ் உத்தரவிட்டாா். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT