திருவண்ணாமலை

சாத்தனூா் அணையில் இருந்து 1,100 கன அடி தண்ணீா் திறப்பு

22nd Aug 2022 03:36 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணையிலிருந்து சனிக்கிழமை இரவு முதல் விநாடிக்கு 1,100 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கா்நாடகத்தில் கடந்த சில வாரங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. கா்நாடக மாநிலம், கே.பி.ஆா். அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றில் நீா் வரத்து அதிகரித்தது.

இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 119 அடி உயரமுள்ள சாத்தனூா் அணையின் நீா்மட்டம், சனிக்கிழமை இரவு 10 மணிக்கு 117 அடியை எட்டியது.

இதையடுத்து, அணையின் பாதுகாப்புக் கருதி விநாடிக்கு 1,100 கன அடி தண்ணீா் அணையிலுள்ள 11 கண் மதகு வழியாக திறந்துவிடப்பட்டது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT