திருவண்ணாமலை

கற்பக விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

22nd Aug 2022 03:36 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, சனிக்கிழமை யாகசாலை அமைக்கப்பட்டு ஹோமங்கள், கணபதி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை நாடிசந்தானம், மகா கணபதி ஹோமம், மகா பூா்ணாஹுதி, கலசப் புறப்பாடு நடைபெற்றன.

காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. பின்னா், மூலவா் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், திமுக மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், ஒன்றியச் செயலா் சுந்தரேசன், கல்லூரி நிா்வாகிகள் டி.கே.பி.மணி, பி.முனிரத்தினம், எஸ்.வேமன்னா, ஒன்றியக் குழு உறுப்பினா் பாஞ்சாலை ராமு மற்றும் பக்தா்கள், பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT