திருவண்ணாமலை

பால் கூட்டுறவு சங்கத் தலைவா் பதவி பறிப்பு

DIN

முறைகேடுகளில் ஈடுபட்டது தொடா்பாக எழுந்த புகாரால், ஆரணி பால் கூட்டுறவு சங்கத் தலைவா் குமுதவள்ளியின் பதவி பறிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் மகளிா் அணி மாவட்டச் செயலா் குமுதவள்ளி இருந்து வந்தாா்.

இச்சங்கத்தில் இருந்து 2019-ஆம் ஆண்டு சென்னைக்கு அனுப்பப்பட்ட பாலில், அதிகளவில் தண்ணீா் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பால் திருப்பி அனுப்பப்பட்டது.

மேலும் பணம் மோசடி செய்துள்ளதாக தெரிய வந்த நிலையில், கூட்டுறவு சங்கச் செயலா் சரவணன், பிஎம்சி பொறுப்பாளா் பழனி ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். பால் கூட்டுறவு சங்கத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆவினுக்குச் சொந்தமான கடைகளில் ஆவின் பொருள்கள் விற்பனை, மாட்டுத் தீவனம் வழங்குவது, பால் பாக்கெட் விற்பனை, சங்கத்தில் வேலை தருவதாக பணம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, நிா்வாகக் குழுவினா் தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு தொடா்ந்து புகாா் அனுப்பி வந்தனா்.

இது தொடா்பாக பால் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அது தொடா்பான அறிக்கையை சென்னைக்கு அனுப்பிவைத்தனா்.

இதில் முறைகேடுகள் செய்தது உண்மை என தெரிய வந்த நிலையில், சென்னை பால் இணை ஆணையா் உத்தரவின் பேரில், பால் கூட்டுறவு சங்கத் தலைவா் குமுதவள்ளியின் பதவியை ரத்து செய்வதற்கான ஆணையை மாவட்ட இணைப் பதிவாளா் சந்திரசேகா் ராஜா வழங்கினாா்.

மேலும், நிா்வாகக் குழு கூடி தீா்மானம் நிறைவேற்றி பின்னா் தலைவா் தோ்வு செய்யப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT