திருவண்ணாமலை

செய்யாறு: இரு வழித் தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கம்

19th Aug 2022 03:16 AM

ADVERTISEMENT

 

செய்யாற்றில் இருந்து இரு வழித் தடங்களில் செல்லும் அரசுப் பேருந்துகளை ஓ.ஜோதி எம்எல்ஏ வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் இருந்து வேலூருக்கு இரவு நேர பேருந்து தடம் எண்.201, நகரப் பேருந்து எண். 56ஏ, செய்யாறு - பிரம்மதேசம் - புலிவலம் - சுனைப்பட்டு ஆகிய பேருந்துகளை தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மண்டல போக்குவரத்துத் துறை துணை மேலாளா்கள் ரகுராமன்(தொழில்நுட்பம்), எஸ். நடேசன் (வணிகம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஓ ஜோதி பங்கேற்ற இரு பேருந்துகளை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் கிளை மேலாளா் எஸ். கணேசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், திருத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், ஒன்றியக் குழுத் தலைவா்கள் டி. ராஜு, திலகவதி ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT