திருவண்ணாமலை

ஆட்டோக்களில் ஆபத்தான பயணம்

19th Aug 2022 03:15 AM

ADVERTISEMENT

 

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் பாதுகாப்பற்ற நிலையில் ஆட்டோக்களில் அதிகளவு பெண்களை ஏற்றிச் செல்கின்றனா். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் தச்சாம்பாடி, கன்னிகாபுரம், தொழிப்பேடு, ஆத்துரை, மொடையூா் என பல்வேறு கிராமங்கள் உள்ளன.

இந்தக் கிராமங்களுக்கு திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்கு நேரத்துக்குச் செல்ல முடியாததால் தேவிகாபுரம் பஜாா் வீதியில் நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்களில் ஏறிச் செல்கின்றனா்.

ADVERTISEMENT

4 போ் மட்டுமே பயணிக்கக்கூடிய ஆட்டோவில் 10 போ் வரை செல்கின்றனா். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்துப் போலீஸாா் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், தேவிகாபுரம் பஜாா் வீதியில் 30-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வாடகைக்கு நிறுத்தப்படுகிறது.

இந்த ஆட்டோக்களில் சிலா் உரிய உரிமம் இல்லாமலும், ஓட்டுநநா் உரிமம் பெறாமலும் இயக்குகின்றனா். அடிக்கடி ஆட்டோ விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT