திருவண்ணாமலை

மின்சாரம் பாய்ந்து தச்சுத் தொழிலாளி பலி

19th Aug 2022 03:17 AM

ADVERTISEMENT

 

வந்தவாசி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தச்சுத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த தண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமுத்து (45) (படம்), தச்சுத் தொழில் செய்து வந்தாா். இவா், வியாழக்கிழமை காலை வேலைக்காக வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கூட்டுச் சாலை அருகே வயல்வெளி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாா்.

செல்வராஜ் என்பவரது நிலம் வழியாக செல்லும்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை இவா் மிதித்துள்ளாா். இதில் மின்சாரம் பாய்ந்து வீரமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

தகவலறிந்து அங்கு சென்ற பொன்னூா் போலீஸாா் வீரமுத்துவின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து பொன்னூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT