திருவண்ணாமலை

சித்தேரி கிராமத்தில் துரியோதனன் படுகளம்

18th Aug 2022 02:36 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த சித்தேரி கிராமத்தில் அமைந்துள்ள பாஞ்சாலியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் புதன்கிழமை நடைபெற்றது.

கேளூா் ஊராட்சிக்கு உள்பட்ட சித்தேரி கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த பாஞ்சாலியம்மன் கோயிலில், கோயில் சாா்பில் மகாபாரத சொற்பொழிவு நடத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், நிகழாண்டு கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த மாதம் 16-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தினா்.

ADVERTISEMENT

மேலும், 17-ஆம் தேதி முதல் தினமும் மாலை வேளையில் கோயில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு, சொற்பொழிவாளா் கிருஷ்ணமூா்த்தியால் பாரத கதை சொல்லப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பாண்டவா்கள், கெளரவா்கள் பிறப்பு, விராடபருவம், குறத்தி குறி சொல்லுதல், கிருஷ்ணன் தூது என பல்வேறு தலைப்புகளில் கதை, இரவு தெருக்கூத்து நடைபெற்றது. தொடா்ந்து, துரியோதனன் படுகளம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சித்தேரி, கேளூா், துரிஞ்சிக்குப்பம், ஆத்தூவாம்பாடி, பால்வாா்த்துவென்றான் என பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியை விழாக் குழுவினா் ஏற்பாடு செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT