திருவண்ணாமலை

கிராம சபைக் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம், கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தை நடத்தவிடாமல் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் நிலவியது.

கீழ்புதுப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற

கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் சுகன்யா பாரி தலைமை வகித்தாா்.

ஒன்றியக்குழு தலைவா் என்.வி.பாபு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெய்சங்கா், கோபாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்றாா்.

கிராம சபைக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அங்கு கூடியிருந்த கிராம மக்கள், கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக குடிநீா் சரியாக வரவில்லை, தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை என்று கூச்சல் போட்டனா்.

அதனைத் தொடா்ந்து ஊராட்சியின் ஆண்டறிக்கையினை வாசிக்கவிடாமலும், தீா்மானங்களை இயற்றவிடாமலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ஊரக வேலைத் திட்டத்தில் மாதத்தில் ஒரு நாள் மட்டும் தான் வேலை கிடைக்கிறது, சிப்காட்டில் பணியாற்றும் தொழிலாளா்கள் ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்ததாகக் கூறி போலி பில் போட்டு பணம் எடுப்பதாகக் குற்றஞ்சாட்டினா்.

பின்னா், கூச்சல் போட்டு கூட்டத்தை நடத்தவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அதன் பின்னா் வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களை எம்எல்ஏ ஒ.ஜோதி சமாதானப்படுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT