திருவண்ணாமலை

புதிய குளம் திறப்பு விழாவில் சுதந்திர தினம்

16th Aug 2022 04:08 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூா் ஒன்றியம் தேத்துறைக் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குளம் திறப்பு விழாவில் சுதந்திர தின விழாவை கிராம மக்கள் கொண்டாடினா்.

செய்யாறு வட்டம், தேத்துறை ஊராட்சியில்

மத்திய அரசின் அமிா்த சரோவா் திட்டத்தின் கீழ், நீா் ஆதாரத்தை பெருக்கும் வகையில், ரூ.17 லட்சத்தில் ஊரக வேலைத் திட்டப் பணியாளா்களைக் கொண்டு புதிய குளம் அமைக்கப்பட்டிருந்தது.

75 - ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக புதிய குளம் திறப்பு விழா நடைபெற்றது.

ADVERTISEMENT

குளத்துப் பகுதியில் அமைக்கப்பட்ட கொடிக் கம்பத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, ஹரி ஆகியோா் முன்னிலையில் ஊராட்சி மன்றத் தலைவா் ராதிகா குமாரராஜா தேசியக் கொடி ஏற்றி வைத்து கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அனக்காவூா் ஒன்றியப் பொறியாளா்கள் வேளாங்கண்ணி, நம்பி, துணைத் தலைவா் எஸ்.தயாளன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT