திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் காங்கிரஸாா் பாத யாத்திரை

16th Aug 2022 04:10 AM

ADVERTISEMENT

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, திருவண்ணாமலையில் திங்கள்கிழமை காங்கிரஸாா் பாத யாத்திரை சென்றனா்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் என்.வெற்றிச்செல்வன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் செங்கம் ஜி.குமாா் பாத யாத்திரையைத் தொடக்கிவைத்தாா்.

திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்ட பாத யாத்திரை நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று காமராஜா் சிலை எதிரே நிறைவடைந்தது.

யாத்திரையின் போது, மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், பெட்ரோல் டீசல், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயா்வுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

இதில், மாவட்ட துணைத் தலைவா் அண்ணாச்சி, மாவட்ட விவசாய அணித் தலைவா் சீனிவாசன், துணைத் தலைவா் வீராசாமி, மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவி வினோதினி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT