திருவண்ணாமலை

சுதந்திர தின விழாவின் போது ஜாதிய பாகுபாடு பிரச்னை புகாா் தெரிவிக்க அழைப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் 75-ஆவது சுதந்திர தினவிழாவின் போது ஜாதிய பாகுபாடின்றி மக்கள் பிரதிநிதிகள் தேசியக் கொடி ஏற்றவும், கிராம சபைக் கூட்டங்களை நடத்தவும் தடையோ, பிரச்னையோ ஏற்பட்டால் ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு புகாா் தெரிவிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுதந்திர தின விழாவின்போது கிராம ஊராட்சிகளில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்கள் தேசியக் கொடியை ஏற்றுவது மரபு. 1989-ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட ஜாதி மற்றும் பழங்குடியினா் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் பிரிவு 3(1)(அ)-ன்படி பட்டியல் ஜாதி அல்லது பழங்குடியினரின் உறுப்பினா் அல்லாத எவரும் பழங்குடியினரைச் சோ்ந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சித் தலைவா், உறுப்பினா் அலுவலகப் பணியில் உள்ளவா்கள் என எவரையும் அவா்களது அலுவலகப் பணிகளையும், கடமைகளையும் செய்யவிடாமல் தடுப்பதோ அல்லது அச்சுறுத்துவதோ தண்டனைக்குரிய குற்றம்.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெறும் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெரு விழாவில் எவ்வித ஜாதிய பாகுபாடின்றி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்களைக் கொண்டு நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளின் தலைமை அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிா்வாகம் எடுத்துள்ளது.

இதேபோல, மாவட்டத்தின் 860 கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களிலும் எவ்வித ஜாதிய பாகுபாடின்றி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றோா் பெருமளவில் கலந்து கொள்ள விரிவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவற்றை செயல்படுத்துவதில் பிரச்னை இருப்பின் ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 04175-233344, 04175-233345, 9345478828 என்ற எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT