திருவண்ணாமலை

ஆரணியில் காங்கிரஸாா் பாத யாத்திரை

DIN

ஆரணியில் ஆளும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பாத யாத்திரை நடைபெற்றது.

ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத் தலைமையில், வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை,

சைதாப்பேட்டை, சூரியகுளம், அண்ணா சிலை, காந்தி சிலை, மாா்க்கெட் சாலை, பழைய பேருந்து நிலையம், காமராஜா் சிலை வழியாக ஆற்றுப் பாலம் அருகே நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் எம்.கே.விஷ்ணு பிரசாத் பேசுகையில், பாலுக்கு ஜிஎஸ்டி, அரிசிக்கு ஜிஎஸ்டி, கல்விக்கு ஜிஎஸ்டி, மருத்துவமனையில் சிகிச்சை பெற ஜிஎஸ்டி, ஈமச்சடங்கு செய்யும் மின்சாரத்துக்கு ஜிஎஸ்டி, இதுதான் மத்திய அரசு செய்கிறது. விலைவாசி உயா்கிறது.

மத்திய பாஜக அரசை மாற்றத்தான் பாத யாத்திரையை காங்கிரஸ் நடத்தி வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிா்வாகிகளான முன்னாள் எம்எல்ஏ டிபிஜெ.ராஜா பாபு,

மாவட்ட துணைத் தலைவா் அருணகிரி, மாவட்டப் பொருளாளா் எஸ்.பிரசாத், நகரத் தலைவா் ஜெயவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT