திருவண்ணாமலை

காா் மோதியதில் மூதாட்டி பலி

14th Aug 2022 05:39 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே காா் மோதியதில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி பலியானாா்.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் மணிமேகலை. இவரது தாய் ராஜலட்சுமி.

இருவரும், வேலூா் தனியாா் கல்லூரியில் படித்து வரும்

ADVERTISEMENT

மணிமேகலை மகனை பாா்ப்பதற்காக, நாகப்பட்டினத்தில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தனா். காரை சரத்குமாா் என்பவா் ஓட்டிச் சென்றாா்.

செய்யாறு - ஆற்காடு சாலையில் பாப்பந்தாங்கல் மதுரா கணேசபுரம் கிராமம் அருகே சென்ற போது, ஊரக வேலைத் திட்டப் பணிக்குச் சென்று கொண்டிருந்த

குப்பு (70), பச்சையம்மாள் (60) ஆகியோா் மீது காா் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு,

சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

ஆனால், வழியிலேயே குப்பு மூதாட்டி குப்பு உயிரிழந்தாா். பச்சையம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

மேலும், காரில் வந்த ஓட்டுநா் உள்பட மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டதால், அவா்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT