திருவண்ணாமலை

போதைப் பொருள் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

14th Aug 2022 05:39 AM

ADVERTISEMENT

 

 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே போதைப் பொருள்களுக்கு எதிராக பள்ளி மாணவா்கள் பங்கேற்ற

மனிதச் சங்கிலி சனிக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட முன்னூா்மங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு மற்றும் தடை குறித்து மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பள்ளி மாணவ, மாணவிகள் போளூா்-செங்கம் சாலை முன்னூா்மங்கலம் பகுதியில் நீண்ட வரிசையில் நின்று போதைப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது, பயன்படுத்தினால் அதன் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து முழக்கங்களை எழுப்பி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் போதைப் பொருள் தடை குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT