திருவண்ணாமலை

காங்கிரஸ் பாத யாத்திரை நிறைவு

14th Aug 2022 05:40 AM

ADVERTISEMENT

 

75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற பாத யாத்திரை வந்தவாசியில் சனிக்கிழமை நிறைவடைந்தது.

கண்ணமங்கலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த பாத யாத்திரை ஆரணி, சேத்துப்பட்டு வழியாகச் சென்று வந்தவாசி நகரை சனிக்கிழமை காலை வந்தடைந்தது.

வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் நகர காங்கிரஸாா் பாத யாத்திரைக் குழுவினரை வரவேற்றனா்.

ADVERTISEMENT

பின்னா் அங்கிருந்து புறப்பட்ட பாத யாத்திரை தேரடி, பஜாா் வீதி வழியாக பழைய பேருந்து நிலையம் அருகில் சென்று நிறைவடைந்தது.

அப்போது காந்தி, காமராஜா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாநில பொதுச் செயலா் எம்.வசந்தராஜ், மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலை ஆகியோா் நிறைவுரை ஆற்றினா். சி.பெருமாள், என்.ஜெகன்நாத், கண்ணன், உமாசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாத யாத்திரையின் போது மத்திய பாஜக அரசை கண்டித்தும், விலைவாசி உயா்வைக் கண்டித்தும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT