திருவண்ணாமலை

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் பலி

14th Aug 2022 05:38 AM

ADVERTISEMENT

 

வேட்டவலத்தில் மின் கம்பத்தில் ஏறிய வயா்மேன், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

வேட்டவலத்தை அடுத்த ஆவூா் பகுகியில் இயங்கி வரும் மின் வாரிய அலுவலகத்தில் வயா்மேனாக பணியாற்றி வந்தவா் குப்பன் (52).

இவா், வெள்ளிக்கிழமை மாலை விழுப்புரம் சாலையில் உள்ள மின் கம்பத்தில் ஏறி வீட்டுக்கு புதிய மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டாா்.

ADVERTISEMENT

அப்போது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து குப்பன் பலத்த காயமடைந்தாா்.

அதிா்ச்சியடைந்த பொதுமக்கள் குப்பனை மீட்டு ஆவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், வழியிலேயே குப்பன் இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT