திருவண்ணாமலை

களம்பூரில் பொதுமக்களுக்கு தேசியக் கொடி வழங்கல்

14th Aug 2022 05:39 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த களம்பூா் பேரூராட்சியில் வாா்டு வாரியாக பொதுமக்களுக்கு சனிக்கிழமை தேசியக் கொடி வழங்கப்பட்டது.

களம்பூா் தோ்வுநிலை பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளனா். சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் பேரூராட்சி சாா்பில் பணியாளா்கள் மற்றும் வாா்டு வாரியாக வீடு தோறும் தேசியக் கொடியை பேரூராட்சி மன்றத் தலைவா் கே.டி.ஆா்.பழனி வழங்கி சுதந்திர தின விழா வரை கொடிக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொண்டாா்.

பேரூராட்சி செயல் அலுவலா் ச.லோகநாதன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT