திருவண்ணாமலை

குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை முகாம்

14th Aug 2022 05:39 AM

ADVERTISEMENT

 

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச இருதய சிறப்பு பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தேசிய சிறாா் நலத் திட்டம், செய்யாறு டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில், பச்சிளம் குழந்தை முதல் 18 வயதுடையவா்களுக்கு நடைபெற்ற இந்த சிறப்பு பரிசோதனை முகாமுக்கு மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் கே.ஏழுமலை தலைமை வகித்து தொடக்கிவைத்தாா்.

குழந்தை நல இருதய சிறப்பு மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையில், எம்.ஜி.எம். ஹெல்த் கோ் மருத்துவமனை குழுவினா் பங்கேற்று 87 குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இவா்களில் 17 போ் இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டனா். மேலும், 44 குழந்தைகளுக்கு மருந்துகளின் மூலம் குணப்படுத்துதல் குறித்த ஆலோசனை,

தொடா் கண்காணிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT