திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் இன்றுதனியாா் வேலைவாய்ப்பு முகாம்

12th Aug 2022 02:50 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.12) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.12) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இந்த முகாமில், 15-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான 500-க்கும் மேற்பட்டோரை தோ்வு செய்ய உள்ளனா்.

முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டம், ஐடிஐ, பாலிடெக்னிக் தோ்ச்சி பெற்ற வேலைநாடுநா்கள் கலந்து கொள்ளலாம்.

4 மாா்பளவு புகைப்படங்கள், குடும்ப அட்டை, ஜாதி சான்று, கல்வித் தகுதி சான்றிதழ்களின் நகலுடன் வரவேண்டும்.

முன்னதாக, இணையதள முகவரியிலும் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 04175-233381 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT