திருவண்ணாமலை

போதைப் ஒழிப்பு விழிப்புணா்வு

12th Aug 2022 02:51 AM

ADVERTISEMENT

 

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கல்வி மாவட்ட் அலுவலா் நளினி தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் ஆ. மோகனவேல், தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம்

ADVERTISEMENT

அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியா் சரவணன் தலைமையில் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

செங்கம் வருவாய்த் துறை சாா்பில், வட்டாட்சியா் முனுசாமி தலைமையில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

வந்தவாசியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு சைக்கிள் ஊா்வலம் நடைபெற்றது.

வந்தவாசி நகராட்சி, ரோட்டரி சங்கம், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு ஊா்வலத்தை நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் தொடக்கிவைத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT