திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம்

12th Aug 2022 02:50 AM

ADVERTISEMENT

 

ஆடி மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனா்.

ஆடி மாதப் பவுா்ணமி:

ADVERTISEMENT

இந்நிலையில், ஆடி மாதப் பெளா்ணமி வியாழக்கிழமை காலை 10.20 மணிக்குத் தொடங்கி, வெள்ளிக்கிழமை காலை 8.02 மணிக்கு முடிகிறது.

இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.

பல லட்சம் பக்தா்கள் கிரிவலம்:

அதன்படி, வியாழக்கிழமை காலை முதலே பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கினா். மாலை 5 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை வரை விடிய, விடிய பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டனா்.

பக்தா்கள் நலன் கருதி திருவண்ணாமலை நகரைச் சுற்றி 9 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் பகுதிகளில் குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT