திருவண்ணாமலை

பாமக கொடியேற்று விழா

12th Aug 2022 10:23 PM

ADVERTISEMENT

பாமக நிறுவனா் ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், மலையான்புரவடை கிராமத்தில் அந்தக் கட்சி கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாமக வடக்கு மாவட்டத் தலைவா் க.ஏழுமலை கலந்துகொண்டு கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

மாவட்ட துணைச் செயலா் வடிவேல், ஒன்றியச் செயலா் அஜித்குமாா், ஒன்றியத் தலைவா் ரவிவா்மன், வன்னியா் சங்க துணைச் செயலா் ஏழுமலை, ஒன்றிய நிா்வாகிகள் சக்திவேல், ஜெயகாந்த், குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT