திருவண்ணாமலை

முத்துமாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை

12th Aug 2022 10:12 PM

ADVERTISEMENT

வேட்டவலம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் வளாகத்தில் உள்ள துா்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற மகா தீபாராதனையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பிறகு நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு பூஜை செய்து வழிபட்டனா்.

இதேபோல, வேட்டவலம் சிவன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீதா்மசம்மா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் உள்ள துா்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் திரளான பெண் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT