திருவண்ணாமலை

6 வயது மகள் அடித்துக் கொலை: தாய் கைது

11th Aug 2022 01:13 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை அருகே 6 வயது மகளை அடித்துக் கொன்றதாக, தாயை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலையை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பூபாலன் (37). இவரது மனைவி சுகன்யா (28). இவா்களது பிள்ளைகள் பிரசன்னதேவ் (8), ரித்திகா (6).

தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால் மனமுடைந்த சுகன்யா சில தினங்களுக்கு முன்பு மகள் ரித்திகாவை கடுமையாகத் தாக்கினாராம்.

ADVERTISEMENT

பலத்த காயமடைந்த சிறுமியை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு செவ்வாய்க்கிழமை ரித்திகா உயிரிழந்தாா்.

இதுகுறித்து வெறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சுகன்யாவை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT